ADDED : ஜூன் 02, 2026 06:26 AM
அ நிறம் | அளவு
மல்லசமுத்திரம்: மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தை, 'போக்சோ'வில் கைதானார்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தை சேர்ந்தவர் ராஜா, 38. பெயின்டர். இவர், தன் மனைவி, 12 வயது மகளுடன் வசித்தார். அடிக்கடி மது அருந்திவிட்டு, வீட்டிலும், அக்கம் பக்கத்தினருடனும் தகராறு செய்து வந்துள்ளார்.
மேலும், ஏழாம் வகுப்பு படிக்கும் தன் மகளிடம் பாலியல் சீண்டலில் அடிக்கடி ஈடுபட்டு வந்துள்ளார்.
சிறுமியின் தாய் புகாரில், திருச்செங்கோடு போலீசார், 'போக்சோ'வில், சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.
