/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முதலீட்டு தொகை திரும்ப கிடைக்க ஆவணங்களை ஒப்படைக்க கெடு விதிப்பு
/
முதலீட்டு தொகை திரும்ப கிடைக்க ஆவணங்களை ஒப்படைக்க கெடு விதிப்பு
முதலீட்டு தொகை திரும்ப கிடைக்க ஆவணங்களை ஒப்படைக்க கெடு விதிப்பு
முதலீட்டு தொகை திரும்ப கிடைக்க ஆவணங்களை ஒப்படைக்க கெடு விதிப்பு
ADDED : மார் 29, 2025 07:26 AM
ராசிபுரம்: 'ராசிபுரம், வி.பி.பி., நகர் ரியல் எஸ்டேட் நிறுவன வழக்கில், முத-லீட்டு தொகையை திரும்ப பெற, புகார்தாரர்கள் அசல் ஆவணங்-களை ஒப்படைக்க வேண்டும்' என, நாமக்கல் பொருளாதார குற்-றப்பிரிவு, டி.எஸ்.பி., ரங்கசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவரது செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கச்சேரி தெருவில், வி.பி.பி., நகர் ரியல் எஸ்டேட் நிறுவனம் இயங்கி வந்தது. அதன் உரிமையாளர் பச்சிராஜா; இவர், தவணை முறையில் காலி வீட்டுமனை பெற, கவர்ச்சி திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் இருந்து பணத்தை வசூலித்துள்ளார். திட்டகாலம் முடிந்த பின்னும், முத-லீட்டுதாரர்களுக்கு மனைகளை பிரித்து வழங்கவில்லை. முத-லீட்டு பணத்தையும் திருப்பி தரவில்லை.இதையடுத்து, முதலீட்டாளர்கள் அளித்த புகார்படி, பச்சிராஜா மற்றும் சிலர் மீது வழக்கு பதியப்பட்டது. கடந்த, 2018ல் உயர்நீதி-மன்ற முன்னாள் நீதிபதி அக்பர் அலி தலைமையில் சிறப்புக்குழு அமைத்து விசாரிக்கப்பட்டது. பின், புகாரளித்தவர்கள் முதலீட்டு தொகையை திரும்பபெற, அசல் ஒப்பந்த பத்திரம், மாத தவணை கட்டிய அசல் ரசீதுகளை ஒப்படைக்க உத்தரவிட்டது. மேலும், அசல் ஆவணங்களை ஒப்படைக்காத புகார் மனுக்களை, தகுதி-யற்ற புகார்தாரர்களாக அறிவிக்க உத்தரவிட்டது.அசல் கிரய ஒப்பந்த பத்திரம், மாத தவணை ரசீதுகளை ஒப்ப-டைக்காத புகார்தாரர்கள், இந்த அறிவிப்பு கண்ட, 21 நாட்க-ளுக்குள், அனைத்து அசல் ஆவணங்களையும், நாமக்கல் பொரு-ளாதார குற்றப்பிரிவு, டி.எஸ்.பி.,யிடம் ஒப்படைத்து, முதலீட்டு தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.