/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.மு.க., அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் நாமக்கல் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
/
தி.மு.க., அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் நாமக்கல் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
தி.மு.க., அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் நாமக்கல் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
தி.மு.க., அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் நாமக்கல் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
ADDED : அக் 19, 2024 01:06 AM
தி.மு.க., அலுவலகத்திற்கு சொந்த கட்டடம்
நாமக்கல் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
நாமக்கல், அக். 19-
நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க.,
அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் கட்டுவதென்று, மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழுக் கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட
செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி., பேசினார்.
கூட்டத்தில், வரும், 22ம் தேதி நாமக்கல்
நகருக்கு வருகை தந்து, செலம்பகவுண்டர் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கும், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வரலாறு காணாத வகையில் வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும், நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல் சட்ட சபை தொகுதியில், சட்ட சபை தேர்தலுக்கான, பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக, தலைமை மூலம், மாநில சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு செயலாளர் ஜான் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிக்கு மாநில மகளிர் தொண்டரணி இணை செயலாளர் ரேகா பிரியதர்ஷினி, ராசிபுரம் சட்டசபை தொகுதிக்கு மாநில நெசவாளர் அணி செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க., அலுவலகம் அமைப்பதற்காக இடத்தை தேர்வு செய்யவும், அதில் புதிய
கட்டடம் கட்டவும், கமிட்டி அமைத்து பணிகளை மேற்கொள்வதென்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநகர மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி, மாநில நிர்வாகிகள் நக்கீரன், ராணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.