/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
5 ஆண்டாக பூட்டியிருந்த கோவிலை திறக்க முடிவு
/
5 ஆண்டாக பூட்டியிருந்த கோவிலை திறக்க முடிவு
ADDED : ஜன 23, 2025 01:14 AM
மல்லசமுத்திரம்:இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால், ஐந்தாண்டுகளாக பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டிருந்த பெரிய மாரியம்மன் கோவில், அமைதி பேச்சில் நேற்று திறக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே, மாமுண்டி கிராமத்தில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. தேவேந்திரகுல வேளாளர் மற்றும் வன்னியர் சமூகத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால், 2019ல் வருவாய்த் துறை அதிகாரிகள் கோவிலை பூட்டி, 'சீல்' வைத்தனர்.
இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று முன்தினம் மாலை, திருச்செங்கோடு தாசில்தார் தலைமையில் பேச்சு நடந்தது.
அதில் எடுக்கப்பட்ட முடிவுகளாவன:
இந்த வார இறுதிக்குள் கோவிலில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, அடுத்த வாரத்திற்குள் வழிபாடு நடத்தப்படும். கோவிலில் தினசரி பூஜை நடத்தப்படும். கோவிலை நிர்வாகம் செய்வது தொடர்பாக, அறநிலையத் துறையின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.
சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், பிரச்னைக்கு காரணமான நபர்களுடன் சேர்த்து, அமைதி பேச்சில் கலந்து கொண்ட நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதை இரு சமூகத்தினரும் ஏற்றுக்கொண்டதால், ஐந்தாண்டாக நீடித்த பிரச்னை முடிவுக்கு வந்தது.