/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரயான் நுாற்பாலையில் 33 சதவீத உற்பத்தியை குறைக்க முடிவு
/
ரயான் நுாற்பாலையில் 33 சதவீத உற்பத்தியை குறைக்க முடிவு
ரயான் நுாற்பாலையில் 33 சதவீத உற்பத்தியை குறைக்க முடிவு
ரயான் நுாற்பாலையில் 33 சதவீத உற்பத்தியை குறைக்க முடிவு
ADDED : டிச 19, 2024 07:29 AM
பள்ளிப்பாளையம்: ரயான் நுால் உற்பத்தி நுாற்பாலைகள், தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதால், 33 சதவீத உற்பத்தியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில், 100க்கும் மேற்பட்ட ரயான் நுால் உற்பத்தி நுாற்பாலைகள் இயங்கி வருகின்றன. சில மாதங்களாக நுால் விலை குறைவால், ரயான் நுால் உற்பத்தி நுாற்-பாலைகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, இந்திய செயற்கை இழை உற்பத்தியா-ளர்கள் சங்க கூட்டம், பள்ளிப்பாளையத்தில் நடந்தது. இதில், நுாற்பாலை அதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.இதுகுறித்து, சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் சுரேஷ், பொரு-ளாளர் பிரசாத் ஆகியோர் கூறியதாவது:ரயான் நுால் கிலோ, 205 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிலோ, 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சந்தை சூழ்நிலை மற்றும் குறைந்த தேவை ஆகியவற்றால், உற்-பத்தி விலைக்கும் குறைவாக, நுாலை விற்க வேண்டிய கட்டா-யத்தில் உள்ளோம். இதனால், கடும் நஷ்டத்தை சந்தித்து வரு-கிறோம். உற்பத்தி செய்யும் நுால்களுக்கு, குறைந்தபட்ச விலையை பெறுவதற்காகவும், தேவையை பூர்த்தி செய்வதற்கா-கவும், நேற்று முன்தினம் முதல் இம்மாதம் இறுதி வரை, இரண்டு வாரங்களுக்கு, ரயான் நுால் உற்பத்தியில், 33 சதவீதம் குறைக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி குறைப்பால், சந்தையில் நாளொன்றுக்கு, 200 முதல், -250 டன் நுால் பற்றாக்குறை ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

