ADDED : அக் 02, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடக்கிறது. நாமக்கல், சேந்தமங்கலம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்ப-னைக்கு கொண்டு வருகின்றனர்.
இதேபோல், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபா-ரிகள் லாரிகளில் மாடுகளை மொத்தமாக வாங்கிச்செல்ல வருகின்-றனர். இந்நிலையில், தற்போது கேரளாவிற்கு கடல் மீன்கள் வரத்து அதிகரித்துள்ளதால், நேற்று நடந்த புதன்சந்தை மாட்டுச்-சந்தைக்கு கேரளா வியாபாரிகள் வருகை குறைந்தது. இதனால், 2 கோடி ரூபாய் வரை விற்பனையான மாட்டுச்சந்தையில், நேற்று 1.20 கோடி ரூபாய்க்கு மட்டுமே வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.