/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மகேஸ்வரர் கோவிலில் லட்சுமி நரசிம்மர் பிரதிஷ்டை
/
மகேஸ்வரர் கோவிலில் லட்சுமி நரசிம்மர் பிரதிஷ்டை
ADDED : மே 05, 2024 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்:குமாரபாளையம்
திருவள்ளுவர் நகர், மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் லட்சுமி
நரசிம்மர் சிலை பிரதிஷ்டை வைபவம் நடந்தது. முன்னதாக, காவிரி
ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. யாக சாலை பூஜை
நடத்தப்பட்டு, லட்சுமி நரசிம்மர் சுவாமியின் திருவுருவச்சிலை
பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கோவில் வளாகத்தில் உள்ள
மங்களாம்பிகை, மகேஸ்வரர், சவுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி,
கால பைரவர், தட்சிணாமூர்த்தி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கல்யாண விநாயகர்
உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது.
பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.