/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆணவ கொலையை தடுக்க தனி சட்டம் இயற்ற கோரிக்கை
/
ஆணவ கொலையை தடுக்க தனி சட்டம் இயற்ற கோரிக்கை
ADDED : ஆக 30, 2025 12:57 AM
நாமகிரிப்பேட்டை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், 4-வது மாநாடு நாமகிரிப்பேட்டையில் நடந்தது. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வைத்தார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சபாபதி வரவேற்றார். மறைந்த தலைவர்களுக்கு, மாவட்ட உதவி தலைவர் கணேஷ் பாண்டியன், அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில உதவி செயலாளர் கனகராஜ், மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாநாட்டில், புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தனர். முன்னதாக நாமகிரிப்பேட்டை பஸ் ஸ்டாண்டிலிருந்து, காரல் மார்க்ஸ், அம்பேத்கர் பெரியார் படங்களை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்று, தலைவர்களுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசு, ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த தனி சட்டம் இயற்ற வேண்டும். மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நேர்மையான முறையில் துவங்க வேண்டும். தனியார் துறையில் கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

