/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காவிரி - திருமணிமுத்தாறு - பொன்னியாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை
/
காவிரி - திருமணிமுத்தாறு - பொன்னியாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை
காவிரி - திருமணிமுத்தாறு - பொன்னியாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை
காவிரி - திருமணிமுத்தாறு - பொன்னியாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை
ADDED : செப் 26, 2024 02:15 AM
நாமக்கல்: 'காவிரி - திருமணிமுத்தாறு - பொன்னியாறு இணைப்பு திட்-டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவ-சாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி, முதல்வர் ஸ்டாலி-னுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகளின், 60 ஆண்டுகால கோரிக்கையான, காவிரி -திருமணிமுத்தாறு - பொன்னியாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசின் கவனத்தில்
உள்ள இந்த திட்ட மதிப்பீட்டு அறிக்கைக்கு உடனடி-யாக நிர்வாக அனுமதி அளித்து, திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள், பாசன வசதி-யின்றி புன்செய், வறட்சி பகுதியாக மாறி உள்ளன. மேட்டூர் உபரி நீரை, தர்மபுரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், வறண்ட
ஏரிகளுக்கு உபரி நீர் நிரப்பும் திட்டத்தை, தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.அதேபோல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்கள், கடும் வறட்சி மாவட்டங்களாக உள்ளன. மேட்டூர் அணையின் உபரிநீரை சேமிக்கும் வகையில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, பள்ளப்-பட்டி வட்டார
பகுதிகளின் வறண்ட ஏரிகள் வழியாக, திண்-டுக்கல் மாவட்டம், வேடச்சந்துார் - குடகனாறு நீர்தேக்கம், குஜி-லியம்பாறை வட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில்
உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், காவிரி உபரிநீரை, வறண்ட ஏரிகளுக்கு நிரப்ப வேண்டும்.இந்த மூன்று திட்டங்களையும், தமிழக முதல்வர் உடனடியாக நிறைவேற்றி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.