/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உயர்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை
/
உயர்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை
உயர்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை
உயர்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை
ADDED : நவ 04, 2024 04:43 AM
நாமக்கல்: 'தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் உயர்கல்வி படித்த ஆசி-ரியர்களுக்கு, ரத்து செய்யப்பட்ட ஊக்கத்தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என, நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்-டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, தமிழக முதல்வ-ருக்கு மனு அனுப்பி உள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் உயர்கல்வி முடித்த, ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு நடைமுறைப்படி, 25,000 ரூபாய் வீதம் வழங்குவதை ஏற்க முடி-யாது. மாதந்தோறும் சம்பளத்தில், 3 சதவீதம் அளவில் ஊக்கத்-தொகையை (இன்கிரிமென்ட்) சேர்த்து வழங்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை காலத்தில், உயர்-கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு இவ்வாறான ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. கடந்த, அ.தி.மு.க., ஆட்சியின்போது, இந்த நடைமுறை திடீரென ரத்து செய்யப்பட்டது. 2023ல், அக்., 30-ல் வெளியிடப்பட்ட ஆதிதிராவிட நலத்துறை அரசு உத்த-ரவில், 2020, மார்ச், 10க்கு முன் உயர்கல்வி பயின்று ஊக்கத்-தொகை பெறாத ஆசிரியர்களுக்கு உடனடியாக, ஊக்கத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. பழைய முறைப்படி அந்த துறையில் ஊக்கத்தொகை உயர்வு அனுமதிக்கப்பட்டது.
அதேபோல், பள்ளிக் கல்வித்துறையிலும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும். சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியில், ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை அறி-விப்பு இடம் பெற்றிருந்தது. அதை நிறைவேற்றவேண்டும். 'பழைய முறைப்படி ஊக்கத்தொகை உயர்வு வழங்கப்படும்' என, ஆதிதிராவிட நலத்துறை அனுமதித்துள்ள நிலையில், பள்ளிக் கல்-வித்துறையை சேர்ந்த ஆசிரியர்களும், தங்களுக்கான அறிவிப்பை எதிர்பார்த்துக் காத்துள்ளனர். தமிழக அரசு உடனடியாக உயர்கல்-விக்கான ஊக்கத்தொகையை, அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்குவதற்கு உரிய உத்தரவை தமிழக முதல்வர் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.