/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தரவு உள்ளீட்டாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
தரவு உள்ளீட்டாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 05, 2024 12:20 AM
நாமக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் தமிழ்-நாடு தரவு உள்ளீட்டாளர்கள் சங்கம் மற்றும் வட்டார கணக்கு உத-வியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று நடந்த ஆர்ப்-பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சபரி தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வேலுசாமி ஆகியோர் கோரிக்கை-களை வலியுறுத்தி பேசினர்.இதில், நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் தரவு உள்ளீட்டா-ளர்களுக்கும், வட்டார கணக்கு உதவியாளர்களுக்கும், உயர் அதி-காரிகளால் பணி நெருக்கடியும், மிரட்டலும் விடுக்கப்படுகிறது. பள்ளிபாளையம் வட்டாரத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஆர்த்தி, பணி அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட-தாக தெரிகிறது. அதற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் ஊழியர் குடும்பத்துக்கு இழப்பீடாக, 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இது குறித்து, மாவட்ட கலெக்டர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.