/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வி.ஏ.ஓ.,க்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
வி.ஏ.ஓ.,க்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 10, 2024 06:10 AM
மோகனுார்: தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மோகனுார் தாசில்தார் அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம், நேற்று நடந்தது. வட்ட தலைவர்கள் அன்புராஜ், உத்தரராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
வி.ஏ.ஓ.,க்களுக்கான தொழில் நுட்ப உபகரணங்கள் இன்றியும், மதிப்பூதியம் ஏதுமின்றியும், முழுமையான வடிவம் பெறாமல், டிஜிட்டல் கிராப் சர்வே செயலி மூலம் பதிவு செய்ய அறிவுறுத்-தப்படுகின்றனர்.
ஏற்கனவே பெரும் பணிச்சுமையில் இருக்கின்ற, வி.ஏ.ஓ.,க்களுக்கு இதன் மூலம் மேலும் பணிச்சுமை ஏற்றுவது ஏற்றுக்கொள்ள இயலாது. அதனால், டிஜிட்டல் கிராப் சர்வே பணியை முற்றிலுமாக புறக்கணித்து, அரசின்
கவனத்தை ஈர்க்கும் வகையில், கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்-டனர். மோகனுார் தாலுகாவிற்குட்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல், நாமக்கல் தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்-பாட்டத்துக்கு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்ட தலைவர் முருகேசன், முன்னேற்ற சங்க வட்ட தலைவர் ராஜமா-ணிக்கம் ஆகியோர் தலைமை
வகித்தனர். திருச்செங்கோடு தாசில்தார் அலுவலகம் முன், மாவட்ட பொருளாளர்கள் ராஜா, தினேஷ்குமார் ஆகியோர் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடந்தது.