/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஸ் வசதி கோரி பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
பஸ் வசதி கோரி பொதுமக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 13, 2024 06:54 AM
மல்லசமுத்திரம்: காளிப்பட்டியில், பஸ் வசதி கோரி மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்திற்குட்பட்ட குருக்கலாம்பாளையம், அம்மாபட்டி, ஜக்கம்மா தெரு, கோணங்கிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 450க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதுவரையில் இப்பகுதியில் பஸ் வசதி இல்லாததால், மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காளிப்பட்டிக்கு, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் காலை, மாலை நேரங்களில் நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
மாணவர்கள் மட்டுமின்றி பெண்கள், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சம்மந்தமாக, அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்திருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை மல்லசமுத்திரம் அருகேயுள்ள காளிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில், மல்லசமுத்திரம் 1வது வார்டு கவுன்சிலர் சரவணன் தலைமையில், அனைத்து கட்சி முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என, நுாற்றுக்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.