/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த ஆர்ப்பாட்டம்
/
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 28, 2024 02:08 AM
ராசிபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழி-யர்கள் சங்கம் சார்பில், ராசிபுரம் தாசில்தார் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தணிக்கையாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் தாமோதரன், கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத ஊதியமாற்ற நிலுவைத்தொகை, முடக்கப்பட்ட அகவி-லைப்படி நிலுவை, பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமை-களை வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்புற நுால-கர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும், மூன்றரை லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதி-யமும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.சாலைப்பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை உயர்நீதி-மன்ற உத்தரவுப்படி, பணக்காலமாக முறைப்படுத்த அரசாணை வெளியிட வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலி பணியி-டங்கள் அனைத்தையும் வேலை வாய்ப்பிற்கு காத்திருக்கும் இளைஞர்களை கொண்டு காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு-றுத்தினர். ராசிபுரம் வட்டக்கிளை துணைத்தலைவர் தினேஷ் உள்-பட பலர்
பங்கேற்றனர்.