/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நில ஒருங்கிணைப்பு சட்டம் திரும்ப பெற ஆர்ப்பாட்டம்
/
நில ஒருங்கிணைப்பு சட்டம் திரும்ப பெற ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 20, 2024 01:39 AM
நில ஒருங்கிணைப்பு சட்டம்
திரும்ப பெற ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோடு, நவ. 20-
திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்டில், அகில இந்திய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து, நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தின. இதில், 2023 ஏப்., 21ல் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டசபைியல் எந்த விதமான விவாதமும் இன்றி இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, 250 ஏக்கர் வரை நிலங்களை கொடுக்க முடியும். அதில், நீர் நிலைகள் இருந்தால் அதனை தாங்களே பராமரித்து கொள்வதாக உறுதியளித்துவிட்டு, நீர்நிலைகளையும் எடுத்துக் கொள்ளலாம். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நீர் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

