/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கெங்கையம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக கொண்டாடிய பக்தர்கள்
/
கெங்கையம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக கொண்டாடிய பக்தர்கள்
கெங்கையம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக கொண்டாடிய பக்தர்கள்
கெங்கையம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக கொண்டாடிய பக்தர்கள்
ADDED : அக் 31, 2025 12:47 AM
நாமக்கல், நாமக்கல் அடுத்த காதப்பள்ளியில், கெங்கையம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.
நாமக்கல் அடுத்துள்ள காதப்பள்ளியில், பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாப்படும். அந்த வகையில், நடப்பாண்டு திருவிழாவு கடந்த, 22 இரவு காப்பு கட்டப்பட்டது. 29ம் தேதி இரவு கோவில் புகுதல், கிடா வெட்டுதலுடன் திருவிழா துவங்கியது. அன்றிரவு சுவாமி புறப்பாடு நடந்தது.
இந்நிலையில், நேற்று காலை ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்தும், பக்தர்கள் அலகு குத்தியும் ஊர்வலமான சென்றனர். தொடர்ந்து கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர் ஒருவர் புலி வேடத்துடன் நடனமாடியபடி வந்தார், ஏராளமான பக்தர்கள் கெங்கையம்மனை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.