/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எல்லை மாரியம்மன் கோவில் விழா பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி
/
எல்லை மாரியம்மன் கோவில் விழா பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி
எல்லை மாரியம்மன் கோவில் விழா பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி
எல்லை மாரியம்மன் கோவில் விழா பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி
ADDED : மே 30, 2025 01:23 AM
ராசிபுரம் :ராசிபுரம், எல்லை மாரியம்மன் கோவில் விழாவில் நேற்று பக்தர்கள் குண்டம் இறங்கி தீ மிதித்தனர்.ராசிபுரம், சுவாமி சிவானந்தா சாலையில் பிரசித்தி பெற்ற எல்லை மாரியம்மன் மற்றும் பாலமுருகன் கோவில் உள்ளது. இங்கு வைகாசி மாத திருவிழா கடந்த, 19ம் தேதி கிராம சாந்தி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த வாரம் தீர்த்த வாரி, பூந்தட்டுக்கள் ஊர்வலம், அம்மனுக்கு காப்பு கட்டுதல் போன்றவை நடந்தன.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை தினந்தோறும் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான பூவோடு எடுத்தல், அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடந்தது. தொடர்ந்து நடந்த, கோவில் பூசாரி சாட்டையடி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்று காலை குண்டம் இறங்கும் விழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, சக்தி அழைத்து அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்தனர். கோவில் முன்பாக உள்ள தீக்குண்டத்தில் கோவில் பூசாரி இறங்கினார். பின்னர் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள், குழந்தைகள் என அனைவரும் தீ மிதித்து தங்களது
நேர்த்திக்கடனை செலுத்தினர்.