/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆங்கில புத்தாண்டு பிறப்பு கோவில், ஆலயங்களில் பக்தர்கள் திரண்டு தரிசனம்
/
ஆங்கில புத்தாண்டு பிறப்பு கோவில், ஆலயங்களில் பக்தர்கள் திரண்டு தரிசனம்
ஆங்கில புத்தாண்டு பிறப்பு கோவில், ஆலயங்களில் பக்தர்கள் திரண்டு தரிசனம்
ஆங்கில புத்தாண்டு பிறப்பு கோவில், ஆலயங்களில் பக்தர்கள் திரண்டு தரிசனம்
ADDED : ஜன 02, 2024 11:34 AM
நாமக்கல்: ஆங்கில புத்தாண்டையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில், கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு, பூஜை நடந்தது. அதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாமக்கல் நகரின் மத்தியில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, முக்கிய நாட்களில் நடக்கும் சிறப்பு வழிபாட்டில், தமிழகம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமியை வழிபட்டு செல்வர்.
அதன்படி, ஆங்கில புத்தாண்டான நேற்று, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அதிகாலை, 3:30 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துப்படி செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, நல்லெண்ணெய், சீயக்காய், திருமஞ்சனம், 1,008 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதையடுத்து, காலை, 5:00 மணிக்கு, துளசி, முல்லை, மல்லிகை, அரளி, அல்லி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான, ஏழு டன் மலர்கள், சுவாமி மீது கூடை கூடையாக கொட்டி சிறப்பு புஷ்பாஞ்சலி நடந்தது.
தொடர்ந்து, தங்க கவசத்தில் சுவாமி எழுந்தருளினார். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை வழிபட்டனர்.
* நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு, புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பங்கு தந்தை தாமஸ் மாணிக்கம், மோகனுார் அடுத்த ஆர்.சி., பேட்டப்பாளையம் புனித செசீலி செபஸ்தியார் ஆலயத்தில், பங்கு தந்தை ஜான்போஸ்கோ ஆகியோர் தலைமையில், சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
* நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவில், பாலதண்டாயுதபாணி கோவில், மோகனுார், காந்தமலை பாலசுப்ரமணியர் கோவில், கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில், அசலதீபேஸ்வரர் கோவில், நவலடியான் கோவில்.
சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவில், கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் என, மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களிலும், கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.
* சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரத்தில், பிரசித்தி பெற்ற அதிரூப விநாயகர், கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆங்கில புத்தாண்டையொட்டி, அதிரூப விநாயகர், கருமாரியம்மன் சுவாமிக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திராவியங்களால் அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, விநாயகர், கருமாரியம்மன் சுவாமி வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காந்திபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
* கோட்டை சாலையில், கோட்டை முனியப்பன் சுவாமி கோவில் உள்ளது. நேற்று அதிகாலை, முனியப்பனுக்கு பால், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, தங்கக்கவசம் சாற்றப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

