/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கிரிவலம் சென்ற பக்தர்கள்
/
அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கிரிவலம் சென்ற பக்தர்கள்
அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கிரிவலம் சென்ற பக்தர்கள்
அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கிரிவலம் சென்ற பக்தர்கள்
ADDED : மே 13, 2025 02:30 AM
திருச்செங்கோடு ;திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் புராண சிறப்பு வாய்ந்ததாகும். சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக, ஒரே வளாகத்தில் அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டு வேலவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் சன்னதிகள் உள்ளன.
இந்த மலைக்கோவில் கிரிவலப்பாதை, ஆறு கிலோ மீட்டர் துாரம் அமைய பெற்றுள்ளது. மலையடிவாரம் வள்ளி, தேவசேனா சமேத ஆறுமுக சுவாமி கோவிலில் துவங்கி, பெரிய ஓங்காளியம்மன் கோவில்,
கண்ணகி கோவில், மலைசுற்று பாதை திருப்பம், மலையடிகுட்டை, வாலரைகேட், மலைக்காவலர் கோவில், சின்ன ஓங்காளியம்மன் கோவில்,
தெற்குரத வீதி என, மீண்டும் வள்ளி, தேவசேனா சமேத ஆறுமுக சுவாமி கோவில் வந்தடையும். சித்திர பவுர்ணமியையொட்டி,
ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
கிரிவலப்பாதையில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பக்தர்களுக்கு பிரசாதம், குடிநீர், பழரசம் வழங்கினர். நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கிரிவலம் சென்று, சுவாமியை தரிசனம் செய்தனர்.