/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரயிலில் இருந்து தவறி விழுந்த தர்மபுரி கட்டட மேஸ்திரி பலி
/
ரயிலில் இருந்து தவறி விழுந்த தர்மபுரி கட்டட மேஸ்திரி பலி
ரயிலில் இருந்து தவறி விழுந்த தர்மபுரி கட்டட மேஸ்திரி பலி
ரயிலில் இருந்து தவறி விழுந்த தர்மபுரி கட்டட மேஸ்திரி பலி
ADDED : ஏப் 28, 2025 07:15 AM
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ரயில்வே ஸ்டேஷன் அருகில், தண்டவாள பகுதியில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. சேலம் ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி, அம்பேத்கர் நகரை சேர்ந்த சங்கர், 50, என தெரிந்தது. அதே பகுதியை சேர்ந்த ஒன்பது பேருடன், இரண்டு மாதங்களுக்கு முன் கட்டட வேலைக்காக, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு சென்றுள்ளார்.கட்டட வேலை முடிந்து அருப்புக்கோட்டையில் இருந்து பெங்களூரு செல்லும் ரயிலில் ஊருக்கு வந்தனர். அப்போது மேஸ்திரி சங்கர், 50, படிக்கட்டில் நின்றபடி வந்துள்ளார். ராசிபுரத்தை கடந்து ரயில் சென்றபோது தவறி விழுந்ததில் இறந்தாதவும், போலீசார் தெரிவித்தனர்.