/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோட்டை ரோட்டரி சங்க புதிய நிர்வாகி பதவியேற்பு
/
கோட்டை ரோட்டரி சங்க புதிய நிர்வாகி பதவியேற்பு
ADDED : ஜூலை 23, 2011 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் கோட்டை ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, இன்று நடக்கிறது.
சங்க புதிய தலைவராக சுப்ரமணியம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். செயலாளராக வரதராஜன், பொருளாளராக மூவேந்தன், துணைத் தலைவராக ராஜேந்திரன், இணை செயலாளராக பாலசுப்ரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும், இன்று நாமக்கல் எஸ்.பி.எஸ்., திருமண மண்டபத்தில் நடக்கும் விழாவில் பதவி ஏற்க உள்ளனர். ஓய்வு பெற்ற அரசுக் கல்லூரி முதல்வர் ரத்தினசபாபதி, ரோட்டரி சங்க ஆளுநர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் தலைவர் ராஜாகுமார், செயலாளர் குணசேகரன் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.