/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கார்பெண்டர் வீட்டில் திருட்டு மர்மநபருக்கு போலீஸ் வலை
/
கார்பெண்டர் வீட்டில் திருட்டு மர்மநபருக்கு போலீஸ் வலை
கார்பெண்டர் வீட்டில் திருட்டு மர்மநபருக்கு போலீஸ் வலை
கார்பெண்டர் வீட்டில் திருட்டு மர்மநபருக்கு போலீஸ் வலை
ADDED : ஜூலை 23, 2011 01:01 AM
ப.வேலூர்: ப.வேலூர் அருகே கார்பெண்டர் வீட்டில் கைவரிசை காட்டி மூன்று பவுன் நகை திருடிய மர்ம நபரை, போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ப.வேலூர் அருகே பொத்தனூர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்பெண்டர் சுப்ரமணியம் (52). அவர், நேற்று முன்தினம் தனது மனைவி இந்திராம்பாள் (50) என்பவருடன் வெளியூர் சென்றுள்ளார். நேற்று மதியம் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டின் முன்புறக் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், பீரோவில் இருந்த மூன்று பவுன் நகையும் மாயமாகியிருந்தது. அதுகுறித்து சுப்ரமணியம், ப.வேலூர் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சுப்ரமணியம் வீட்டில் கைவரிசை காட்டிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.