/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் அரசு கல்லுாரியில் பேரிடர்; மேலாண் தீ விபத்து விழிப்புணர்வு
/
நாமக்கல் அரசு கல்லுாரியில் பேரிடர்; மேலாண் தீ விபத்து விழிப்புணர்வு
நாமக்கல் அரசு கல்லுாரியில் பேரிடர்; மேலாண் தீ விபத்து விழிப்புணர்வு
நாமக்கல் அரசு கல்லுாரியில் பேரிடர்; மேலாண் தீ விபத்து விழிப்புணர்வு
ADDED : அக் 18, 2024 07:03 AM
நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில் பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு கல்லுாரியின் யூத் ரெட் கிராஸ் சார்பில், பேரிடர் மேலாண்மை மற்றும் தீ பாதுகாப்பு என்ற தலைப்பில் பயிலரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார்.
நாமக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அலுவலர் செந்தில்குமார் பேசுகையில், ''உலகில் நீர், நிலம், காற்று, ஆகாயம், மற்றும் தீ போன்றவற்றினால் எவ்வாறு விபத்துகள் பேரிடர்கள் ஏற்படுகின்றன, அதை எவ்வாறு வெற்றிகரமாக முறியடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மாணவ, மாணவியர் கல்வி கற்பதோடு மட்டுமல்லாமல் விபத்துகளின் போது தப்பிப்பதற்கு எல்லா வழிமுறைகளையும் தெரிந்து வைத்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்,'' என்றார்.
நாமக்கல் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பேரிடர் ஒருங்கிணைப்பாளர் ஆண்டனி ஜெனித் பேசுகையில், ''நம் நாட்டில் வெள்ளம், புயல், மற்றும் நிலச்சரிவின் போது மாணவ, மாணவியர் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதோடு மனதளவில் நல்ல தைரியத்துடன் இவற்றை எதிர்கொண்டு, வாழ்க்கையில் உள்ள எல்லா இடர்பாடுகளையும் தாண்டி முன்னேற வேண்டும்,'' என்றார்.
மாவட்ட உதவி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அலுவலர் வெங்கடாசலம், மாவட்ட ரெட் கிராஸ் செயலர் ராஜேஷ் கண்ணன், யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் வெஸ்லி, திட்ட அலுவலர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.