/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் 243 மாணவர்களுக்கு ரூ.14.33 கோடி கல்வி கடன் வழங்கல்
/
மாவட்டத்தில் 243 மாணவர்களுக்கு ரூ.14.33 கோடி கல்வி கடன் வழங்கல்
மாவட்டத்தில் 243 மாணவர்களுக்கு ரூ.14.33 கோடி கல்வி கடன் வழங்கல்
மாவட்டத்தில் 243 மாணவர்களுக்கு ரூ.14.33 கோடி கல்வி கடன் வழங்கல்
ADDED : செப் 27, 2024 07:15 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், எர்ணாபுரம் சி.எம்.எஸ்., கல்லுாரி கூட்டரங்கில், மாணவ, மாணவகளுக்கு கல்வி கடன் உதவி வழங்கும் விழா நடந்தது.
மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., கல்வி கடனுதவிகளை வழங்கி பேசியதாவது: ஏழை, எளிய மாணவர்களின் உயர் கல்விக்கு, பணம் ஒரு தடையாக இருக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு, தமிழக முதலவர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம், 7.50 லட்சம் ரூபாய் வரை ஜாமின் இல்லாமல் கடனுதவியும், 4 லட்சம் வரை வட்டியை அரசு மானியமாகவும் செலுத்துகிறது. 7.50 லட்சத்திற்கு மேல் கடனுதவி தேவைப்படின், சொத்து ஜாமின் பேரில் வழங்கப்படுகிறது. வெளிநாடு சென்று படிக்கவும் கடனுதவி வழங்கப்படுகிறது.
இதை மாணவர்கள் சரியாக பயன்படுத்தி, நன்கு படித்து வேலைவாய்ப்பு பெற்று பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். மேலும் வங்கியில் வாங்கிய கல்வி கடனை, குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும். நீங்கள் திரும்பி செலுத்தும் கடன், மற்றொரு மாணவரின் கல்விக்கு நீங்கள் செய்திடும் உதவியாகும்.
நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில், 3,918 மாணவ, மாணவிகளுக்கு ரூ.530 கோடி கல்வி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த ஜூன் 30 வரை, 945 மாணவ, மாணவிகளுக்கு, 11 கோடி ரூபாய் கல்வி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பல்வேறு வங்கிகள் சார்பில், 234 பேருக்கு, 14.33 கோடி ரூபாய் கல்வி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் திட்ட சப்--கலெக்டர் பிரபாகரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.