sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கல்குவாரி திறக்க கருத்து கேட்பு கூட்டம் இருதரப்பு மோதலால் பாதியில் நிறுத்தம்

/

கல்குவாரி திறக்க கருத்து கேட்பு கூட்டம் இருதரப்பு மோதலால் பாதியில் நிறுத்தம்

கல்குவாரி திறக்க கருத்து கேட்பு கூட்டம் இருதரப்பு மோதலால் பாதியில் நிறுத்தம்

கல்குவாரி திறக்க கருத்து கேட்பு கூட்டம் இருதரப்பு மோதலால் பாதியில் நிறுத்தம்


ADDED : நவ 14, 2024 07:22 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தை சுற்றிலும், 10க்கும் மேற்பட்ட இடங்களில் கல் குவாரிகள் அமைக்கப்பட்டு, மலைப்பகுதியில் இருந்து பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், கொண்டமநாய்க்கன்பட்டியில், 4 கல்குவாரிகள் திறக்க கருத்து கேட்பு கூட்டம், சேந்தமங்கலத்தில் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். அப்போது, கலெக்டர் முன், 'கல் குவாரி உரிமையாளர்கள் தரப்பில் குவாரி திறக்க எதிர்ப்பு இல்லை' என, ஆதரவாக பேசிக்கொண்டிருந்-தனர். அப்போது அங்கு வந்த சுற்றுச்சூழல் தன்னார்வலர் முகிலன், கல்குவாரி திறக்கும் இடத்தின் அருகில் குடியிருப்புகள் உள்ளதாகவும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என

எதிர்ப்பு தெரி-வித்து பேசினார்.அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில், புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் கோமதி, தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து

வாக்குவாதம் நீடித்-ததால், கூட்டத்தை பாதியிலேயே முடித்து விட்டு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us