/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மஞ்சள் செடிகளில் நோய் தாக்குதல்; வளர்ச்சி இல்லை என விவசாயிகள் புகார்
/
மஞ்சள் செடிகளில் நோய் தாக்குதல்; வளர்ச்சி இல்லை என விவசாயிகள் புகார்
மஞ்சள் செடிகளில் நோய் தாக்குதல்; வளர்ச்சி இல்லை என விவசாயிகள் புகார்
மஞ்சள் செடிகளில் நோய் தாக்குதல்; வளர்ச்சி இல்லை என விவசாயிகள் புகார்
ADDED : அக் 18, 2024 07:04 AM
சேந்தமங்கலம்: எருமப்பட்டி பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள மஞ்சள் செடிகளில் நோய் தாக்குதல் காரணமாக வளர்ச்சி இல்லாமல் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
சேந்தமங்கலம்,எருமப்பட்டி,காளப்பநாய்க்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மஞ்சள் பயிரிட்டு வருகின்றனர். ஆண்டு பயிரான இந்த மஞ்சளுக்கு சீசன் நாளில் விலை குறைந்தாலும், மற்ற நாட்களில் நல்ல விலை கிடைக்கிறது. இதனால், கடந்த ஆனி மாத பட்டத்துக்காக இந்த பகுதியில், 500 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் மஞ்சள் நடவு செய்துள்ளனர். இந்நிலையில், எருமப்பட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் சில இடங்களில் நடவு செய்துள்ள மஞ்சள் பயிரில், கிழங்கில் ஏற்பட்டுள்ள புழு காரணமாக மஞ்சள் செடிகளில் நோய் தாக்குதல் ஏற்பட்டு செடிகள் வளர்ச்சி இல்லாமல் வீணாகி வருகிறது.
இது குறித்து விவசாயி ராமன் கூறியதாவது: கடந்த ஆனி மாதப்பட்டத்தில் நடவு செய்தேம். அதன் பின் சில மாதங்கள் போதிய மழையில்லாத நிலையில், தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. ஆனால், இந்த மஞ்சள் செடிகளில் நோய் தாக்கம் ஏற்பட்டு வளர்ச்சி இல்லாமல் உள்ளது. எனவே தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு செய்து, நோய் தாக்குதலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.