/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓட்டுச்சாவடி மையங்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

ADDED : ஏப் 19, 2024 06:46 AM
நாமக்கல் : நாமக்கல் லோக்சபா தொகுதியில், கொ.ம.தே.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - நா.த.க., - மற்றும் சுயேட்சைகள் உட்பட, 40 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். லோக்சபா தேர்தலையொட்டி, 692 மையங்களில், 1,628 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும், மூன்று ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை அறிய, 'விவிபேட்' இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும்.மாவட்டத்தில் உள்ள ஆறு சட்ட சபை தொகுதிகளுக்கும், 5,665 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், 2,316 கட்டுப்பாட்டு கருவிகள், 2,301 வாக்காளர்கள் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை தெரிந்து கொள்வதற்கான 'விவிபேட் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களுக்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி, விவிபேட், ஓட்டுப்பதிவிற்கு தேவையான பொருட்கள், ஜி.பி.எஸ்., கருவி பொருத்துப்பட்ட வாகனங்களில், போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.நாமக்கல் பி.டி.ஓ., அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தீபன் தலைமையில், ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டது.