ADDED : ஏப் 29, 2025 01:41 AM
ராசிபுரம்:
ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில், உழவர் சந்தை அமைந்துள்ளது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் காய்கறி, பழம், கீரை உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். உழவர் சந்தையின் வெளிப்புறம், கடை வைக்க அனுமதி இல்லை.
இந்நிலையில், நேற்று சந்தைக்கு வெளியே, 50 வயது மதிக்கத்தக்க பெண் வியாபாரி கடையை வைத்து விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இதை கேள்விப்பட்ட உழவர் சந்தைக்கு உள்ளே இருந்து வந்த பெண்ணுக்கும், கடை வைத்திருந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி கைகலப்பாக மாறியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உழவர் சந்தைக்கு வெளியே கடை வைப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் முறையாக கண்காணித்து உழவர் சந்தைக்கு வெளியே கடை வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.