/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரேஷனில் வினியோகிக்காத கரும்புகளை விற்று பணம் கட்ட உத்தரவால் அதிருப்தி
/
ரேஷனில் வினியோகிக்காத கரும்புகளை விற்று பணம் கட்ட உத்தரவால் அதிருப்தி
ரேஷனில் வினியோகிக்காத கரும்புகளை விற்று பணம் கட்ட உத்தரவால் அதிருப்தி
ரேஷனில் வினியோகிக்காத கரும்புகளை விற்று பணம் கட்ட உத்தரவால் அதிருப்தி
ADDED : ஜன 15, 2024 10:41 AM
நாமக்கல்: 'பொங்கல் பரிசு தொகுப்புடன், வினியோகம் செய்யாத கரும்புகளை விற்று, பணத்தை செலுத்த வேண்டும்' என, கூறியதால் ரேஷன் கடை விற்பனையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதியான நபர்களுக்கு பொங்கல் தொகுப்பு, 1,000 ரூபாய் பணம் வழங்க உத்தரவிட்டது. அரசு, பொதுப்பணித்துறை ஊழியர்கள், வருமானவரி செலுத்துபவர்கள், சர்க்கரை கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு இல்லை என தெரிவித்தது. இதனால், பொதுமக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது. இதையடுத்து சில நாட்களில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பும், பணமும் வழங்க உத்தரவிட்டது. நாமக்கல் மாவட்டத்தில், 90 சதவீதம் பேர் பொங்கல் பரிசு பெற்று சென்றுள்ளனர். 20,000 பேர் மட்டுமே பொங்கல் தொகுப்பை பெறவில்லை.
இந்நிலையில், பொங்கல் பரிசு வாங்காதவர்கள் கரும்புகளை விற்று அதற்கான தொகையை செலுத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதனால், ரேஷன் விற்பனையாளர்கள்
அதிருப்தியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்க தலைவர் ரங்கசாமி கூறியதாவது: விற்பனையாளர்களை மீதமுள்ள கரும்பை, 24 ரூபாய்க்கு விற்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இது விற்பனையாளர்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. விற்பனையாளர்கள் டோக்கன் வழங்கியதில் இருந்து பொங்கல் பொருள்கள் வழங்குவது, ரொக்கம், 1,000 ரூபாய் வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்து முடித்துள்ளனர். இந்த சூழ்நிலையில், விற்பனையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். இதற்கு மாறாக அரசு இவ்வாறு அறிவித்திருப்பது மன வேதனை அளிக்கிறது. அரசு அறிவித்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.