/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே பயணியை இறக்கிவிடும் பஸ்கள் காற்றில் பறந்த அதிகாரிகள் உத்தரவால் அதிருப்தி
/
பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே பயணியை இறக்கிவிடும் பஸ்கள் காற்றில் பறந்த அதிகாரிகள் உத்தரவால் அதிருப்தி
பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே பயணியை இறக்கிவிடும் பஸ்கள் காற்றில் பறந்த அதிகாரிகள் உத்தரவால் அதிருப்தி
பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே பயணியை இறக்கிவிடும் பஸ்கள் காற்றில் பறந்த அதிகாரிகள் உத்தரவால் அதிருப்தி
ADDED : ஆக 07, 2025 01:12 AM
நாமக்கல், சேலத்தில் இருந்து நாமக்கல் வரும் அரசு, தனியார் பஸ்கள், அதிகாரிகளின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, முதலைப்பட்டி போலீஸ் அவுட் போஸ்ட் அருகே பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றன.
நாமக்கல் நகரில், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அதனால், சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், நெரிசலில் சிக்கி விழிபிதுங்குகின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதற்காக, முதலைப்பட்டியில் உள்ள ஹிந்து சமய அறநிலைய துறையினருக்கு சொந்தமான, 12.90 ஏக்கர் நிலத்தில், புதிய புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான தொகையும், நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது
.அ.தி.மு.க., ஆட்சியில், தேர்வு செய்யப்பட்ட இடத்தில், 19.50 கோடி ரூபாய் மதிப்பில், 2022 அக்., 20ல், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டு, 2024 செப்., 22ல், தமிழக முதல்வர் ஸ்டாலினால், 'முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு பஸ் ஸ்டாண்ட்' திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து, 2024 அக்., 10ல், பஸ் போக்குவரத்து துவக்கப்பட்டது. சேலத்தில் இருந்து நாமக்கல் வரும் அரசு, தனியார் பஸ்கள், புது பஸ் ஸ்டாண்ட் செல்வதற்கு முன், போலீஸ் அவுட் போஸ்ட் அருகே நிறுத்தி, பயணிகளை இறக்கி செல்கின்றன.
அவ்வாறு இறங்கும் பயணிகள், எதிரே உள்ள நிழற்கூடையில் நின்று, தாங்கள் செல்லும் பகுதிக்கு வரும் பஸ்சில் ஏறி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதனால், புது பஸ் ஸ்டாண்டிற்குள் பயணிகள் கூட்டம் குறைவதுடன், அங்குள்ள கடைகளில் வியாபாரமும் பாதிக்கப்படுகிறது. அவற்றை கருத்தில்கொண்டு, பஸ் ஸ்டாண்டிற்கு முன், போலீஸ் அவுட் போஸ்ட் அருகே
பயணிகளை இறக்கிவிடாமல், நேராக பஸ் ஸ்டாண்டிற்குள் இறக்கிவிட வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
ஆனால், அவற்றை காற்றில் பறக்க
விடும் பஸ் டிரைவர்கள், வழக்கம்போல் பஸ் ஸ்டாண்டிற்கு முன், போலீஸ் அவுட் போஸ்ட் அருகே பயணிகளை இறக்கிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சேலத்தில் இருந்து நாமக்கல் வரும் அனைத்து அரசு, தனியார் பஸ்களும், பஸ் ஸ்டாண்டிற்குள் பயணிகளை இறக்க நடவடிக்கை எடுப்பதுடன், அங்கிருந்து பயணிகள் எளிதாக பழைய பஸ் ஸ்டாண்டிற்கு செல்வதற்கு கூடுதல் பஸ்களை இயக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.