/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'எண்ணும் எழுத்தும்' பயிற்சி பாட புத்தகங்கள் வினியோகம்
/
'எண்ணும் எழுத்தும்' பயிற்சி பாட புத்தகங்கள் வினியோகம்
'எண்ணும் எழுத்தும்' பயிற்சி பாட புத்தகங்கள் வினியோகம்
'எண்ணும் எழுத்தும்' பயிற்சி பாட புத்தகங்கள் வினியோகம்
ADDED : டிச 18, 2025 06:01 AM

எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியனில், 53 அரசு துவக்க பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ, மாணவியர் அனைவ-ருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், பள்ளி கல்வித்துறை மூலம், 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சிக்காக, ஆண்டுக்கு, 3 முறை புதிய பாட புத்தங்கள், 3 பரு-வங்களாக மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகி-றது.
தற்போது, எருமப்பட்டி யூனியனில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி அளிக்க, 3ம் பருவத்திற்கான பாட புத்தகங்கள், பாடநுால் கழ-கத்தில் இருந்து வந்துள்ளது. இந்த, மூன்றாம் பருவ புத்தகங்-களில் ஆசிரியர் கையேடு, மாணவர்களின் பயிற்சி புத்தகம் என, 3,400 பாட புத்தகங்கள் வந்துள்ளன. இந்த புத்தகங்களை, அந்-தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நடந்தது.