/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்ட பா.ஜ., நிர்வாகி தி.மு.க.,வில் ஐக்கியம்
/
மாவட்ட பா.ஜ., நிர்வாகி தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : நவ 19, 2024 01:59 AM
மாவட்ட பா.ஜ., நிர்வாகி
தி.மு.க.,வில் ஐக்கியம்
ராசிபுரம், நவ. 19-
நாமக்கல் மாவட்ட, பா.ஜ., இளைஞரணி பொதுச்செயலாளர் கோவிந்தராஜ், எம்.பி., ராஜேஸ்குமார் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர். அவருடன், வெண்ணந்துார் ஒன்றியம், மின்னக்கல், தேங்கல்பாளையத்தை சேர்ந்த பா.ஜ., இளைஞர் அணி நிர்வாகிகள் பெரியசாமி, சங்கர், ராமு மற்றும் பா.ஜ., மகளிரணியை சார்ந்த கோகுலபிரியா, தீபிகா, கலையரசி, கவுசிகா உள்பட, 30 பேர், பா.ஜ.,விலிருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தனர். ஏற்பாடுகளை மாவட்ட தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பிரபு செய்திருந்தார். ஒன்றிய கழக செயலாளர் துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

