/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்ட கபடி போட்டி நாச்சியார் அணிக்கு பரிசு
/
மாவட்ட கபடி போட்டி நாச்சியார் அணிக்கு பரிசு
ADDED : மே 17, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம் :கொல்லிமலையில் உள்ள அரி யூர் நாடு பஞ்., சோளக்காட்டில், நாச்சியார் விளையாட்டு குழு மற்றும் இறந்த முன்னாள் கபடி வீரர்களின் நினைவாக, 26ம் ஆண்டாக மாவட்ட அளவிலான கபடி போட்டி தொடக்க விழா நடந்தது. முன்னாள் பஞ்., தலைவர் நாகலிங்கம் தலைமை வகித்தார். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த, 42 அணிகள் விளையாடின.
முதல் பரிசு பெற்ற நாச்சியார் கபடி குழு அணிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரசேகரன், 25,000 ரூபாய் வழங்கினார். இதேபோல், இரண்டாம் பரிசு, 15,000 ரூபாய்; முன்னாள் யூனியன் தலைவர் மாதேஸ்வரி அண்ணாதுரை, முன்றாம் பரிசு, 7,000 ரூபாய், முன்னாள் கவுன்சிலர் தனுஷ்கோடி வழங்கினர்.