ADDED : அக் 15, 2026 05:02 AM

அ நிறம் | அளவு
நாமக்கல்:அப்துல்கலாம்
பிறந்த நாளையொட்டி, பள்ளி கல்வித்துறை சார்பில், மாணவ,
மாணவியருக்கு, மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி, கட்டுரை போட்டி,
பேச்சுப்போட்டி, நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில்
நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் திருஞானம் தலைமை வகித்தார். முதன்மை கல்வி
அலுவலரின் நேர்முக உதவியாளர் அப்துல் வகாப் துவக்கி வைத்தார். இதில்,
ஆறாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை ஒரு பிரிவும், 9 முதல், 10ம் வகுப்பு
வரை ஒரு பிரிவும், பிளஸ் 1, பிளஸ் 2 ஒரு பிரிவும் என, மூன்று
பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. அரசு மற்றும் தனியார்
பள்ளிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு, முதன்மை கல்வி அலுவலர்
மாதவன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்குவார்.
