ADDED : நவ 23, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாவட்ட அளவில்
நீச்சல் போட்டி
நாமக்கல், நவ. 23-
நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், மாவட்ட விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. அங்குள்ள நீச்சல் குளத்தில், பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஷ்வரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி ஆகியோர் துவக்கி வைத்தனர். நேற்று முன்தினம் நடந்த மாணவியர்களுக்கான போட்டியில், 230 வீராங்கனைகள் பங்கேற்றனர். அதேபோல் பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில், நேற்று நடந்த மாணவர்களுக்கான போட்டியில், அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் இருந்து, 270 வீரர்கள் பங்கேற்றனர். இதில், வெற்றி பெறும் மாணவ, மாணவியர், திருநெல்வேலியில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.