/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு: தன்னார்வலருக்கு அழைப்பு
/
மாவட்டத்தில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு: தன்னார்வலருக்கு அழைப்பு
மாவட்டத்தில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு: தன்னார்வலருக்கு அழைப்பு
மாவட்டத்தில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு: தன்னார்வலருக்கு அழைப்பு
ADDED : ஜன 11, 2024 12:05 PM
நாமக்கல்: 'மாவட்டத்தில் ஈர நில பகுதிகளில், ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி, வரும், 27, 28ல் நடக்கிறது. அப்பணியில், தன்னார்வலர்கள் பங்கேற்கலாம்' என, நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில், 2023-24ம் ஆண்டிற்கான, ஒருங்கிணைந்த 'ஈர நில பறவைகள்' கணக்கெடுப்பு வரும், 27, 28ல், மாவட்டம் முழுவதும் நடக்கிறது. முதல் கட்டமாக, இம்மாதம் ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படும். அதன்பின், மார்ச், 2, 3ல், வனப்பகுதியில் உள்ள பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படும். நாமக்கல் வன கோட்டத்திற்குட்பட, 18 ஈர நிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில் இந்த கணக்கெடுப்பு நடைபெறும்.
இப்பணியில், ஆர்வம் உள்ள பள்ளி மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள், பறவையியல் நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம். கணக்கெடுப்பில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள மாணவர்கள், தன்னார்வலர்கள், வனச்சரகர்கள் பெருமாள், ரவிச்சந்திரன், கண்காணிப்பாளர் மணிகண்டன், உதவியாளர் ரமேஷ் ஆகியோரை, 99650 52650, 88837 42801, 97904 09460, 82201 14701 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு, விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.