/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்: ரூ.90 லட்சம் இலக்கு
/
கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்: ரூ.90 லட்சம் இலக்கு
கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்: ரூ.90 லட்சம் இலக்கு
கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்: ரூ.90 லட்சம் இலக்கு
ADDED : செப் 20, 2025 01:58 AM
நாமக்கல், நாமக்கல் கோ-ஆப்டெக்ஸில், தீபாவளி சிறப்பு விற்பனை துவக்க விழா, நேற்று நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். அப்போது, அவர் கூறியதாவது:
இந்தியாவின் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும் கோ--ஆப்டெக்ஸ், 1935ல் தொடங்கப்பட்டு, 90 ஆண்டுகளாக, தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையிலும், தொடர்ந்து வேலை வாய்ப்பை வழங்குவதற்காக, விழா காலங்களில், 30 சதவீதம் வரை அரசு சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. இந்தாண்டு, 'தீபாவளி-2025'ல், புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம் பட்டு புடவைகள், ஆரணி பட்டு புடவைகள், சேலம், தஞ்சை பட்டு புடவைகள் மற்றும் புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள் ஏராளமாக குவிந்துள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு கைத்தறி ரகங்களுக்கு, வரும், நவ., 30 வரை, 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் பயன் பெறும் வகையில், அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும். நாமக்கல் மாவட்டத்தில் கோ--ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு, 90 லட்சம் ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோ--ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து, மாதந்தோறும், 300 முதல், 3,000 ரூபாய் வரை சேமித்து, இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். தீபாவளி சிறப்பு தள்ளுபடியாக, அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு, வட்டியில்லா கடன் வசதியில், 30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
கோ--ஆப்டெக்ஸின் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு மேலாளர் பாலசுப்ரமணியன், நாமக்கல் விற்பனை நிலைய மேலாளர் செல்வாம்பாள், ஓய்வு பெற்ற மேலாளர் ஆறுமுகம், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.