/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.மு.க., - பஞ்., தலைவி வீட்டில் மதுபாட்டில் பறிமுதல்
/
தி.மு.க., - பஞ்., தலைவி வீட்டில் மதுபாட்டில் பறிமுதல்
தி.மு.க., - பஞ்., தலைவி வீட்டில் மதுபாட்டில் பறிமுதல்
தி.மு.க., - பஞ்., தலைவி வீட்டில் மதுபாட்டில் பறிமுதல்
ADDED : அக் 16, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, சிவநாய்க்கன்பட்டி பஞ்.,ல் ஒரு வீட்டில் கள்ளத்தனமாக மதுபானம் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் (பொ) மற்றும் போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தி.மு.க., பஞ்., தலைவி தேவிகா, 52, என்பவரது பண்ணை தோட்டத்து வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, 109 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், பஞ்., தலைவரின் கணவரும், தி.மு.க., பிரமுகருமான பெரியசாமி, 58, என்பவரிடம் நாமக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.