ADDED : செப் 28, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்:குமாரபாளையம் நகர, தி.மு.க., தற்போது, வடக்கு, தெற்கு என, இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தி.மு.க., தலைமை அலுவலகம் மூலம் தெற்கு நகர, ஐந்து துறை அமைப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான விளம்பர பேனர்கள், ஐந்து இடங்களில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், ஐந்து பேனர்களையும் கிழித்துள்ளனர். இதை கண்டதும் அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள், குமாரபாளையம் தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன் தலைமையில், குமாரபாளையம் போலீசில் புகாரளித்தனர். குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.