/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கழிவுநீர் திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி தி.மு.க., -பா.ஜ., கவுன்சிலர்கள் தர்ணா
/
கழிவுநீர் திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி தி.மு.க., -பா.ஜ., கவுன்சிலர்கள் தர்ணா
கழிவுநீர் திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி தி.மு.க., -பா.ஜ., கவுன்சிலர்கள் தர்ணா
கழிவுநீர் திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி தி.மு.க., -பா.ஜ., கவுன்சிலர்கள் தர்ணா
ADDED : மே 30, 2025 01:43 AM
திருச்செங்கோடு, திருச்செங்கோடு நகராட்சியில், கழிவுநீர் திட்டம் துவங்கி முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. பள்ளம் பறிக்கப்பட்டு மூடப்படாமல் இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது. பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என, தி.மு.க.,-பா.ஜ., கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
திருச்செங்கோடு நகராட்சி சாதாரண கூட்டம் சேர்மன் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
சேர்மன் : திருச்செங்கோட்டில் கண்ணகி கோட்டம், சிற்ப கல்லுாரி அமைக்க வேண்டும்.
பா.ஜ.,கவுன்சிலர் தினேஷ்குமார் : எனது வார்டில் மழைநீர் வடிகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் இருப்பதால், தினமும் விபத்து நடந்து வருகிறது.
தி.மு.க.,கவுன்சிலர் மாதேஸ்வரன் : நகராட்சியில், 1,7, 8, 10 ஆகிய வார்டுகளில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்நிலையில், திட்டப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதை மீண்டும் செயல்படுத்த கோரி, தி.மு.க., கவன்சிலர்கள் மாதேஸ்வரன், கலையரசி, பா.ஜ., கவுன்சிலர் தினேஷ்குமார் ஆகியோர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
அ.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திகேயன் : கவுன்சிலர்களின் போராட்டம் நியாயமானது. திருச்செங்கோடு எம்.எல்.ஏ., எந்த பிரச்னையாக இருந்தாலும், வார்டு கவுன்சிலர்களை வைத்துக் கொண்டு பேசுவது நல்லது. இந்த பிரச்னையில் கட்சிகளை பிரித்து பார்க்காமல் மக்களுக்கு நன்மையை செய்ய வேண்டும்.
இதையடுத்து, 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூட்டத்தில் தெரிவித்து நிறைவு பெற்றது. இந்நிலையில், நகராட்சி வாயிலில் பொதுமக்களுடன் சேர்ந்து கவுன்சிலர்கள் முற்றுகை போராட்டம் செய்தனர். அங்கு வந்த நகராட்சி சேர்மன் நளினிசுரேஷ்பாபு, எம்.எல்.ஏ., சென்னையில் உள்ளார்.அவர் வந்தவுடன் கலந்தாலோசித்து நல்ல முடிவு எடுக்கலாம் என கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.