/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இன்று முதல் வார்டு வாரியாக தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம் நாமக்கல், நவ. 6-
/
இன்று முதல் வார்டு வாரியாக தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம் நாமக்கல், நவ. 6-
இன்று முதல் வார்டு வாரியாக தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம் நாமக்கல், நவ. 6-
இன்று முதல் வார்டு வாரியாக தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம் நாமக்கல், நவ. 6-
ADDED : நவ 06, 2024 01:30 AM
இன்று முதல் வார்டு வாரியாக தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம்
நாமக்கல், நவ. 6-
'வரும், 2026 சட்டசபை தேர்தலுக்காக, நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், வார்டு வாரியாக பூத் கமிட்டி அமைக்கும் பணி இன்று முதல் நடக்கிறது' என, மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், ஒன்றியம், நகரம், டவுன் பஞ்., மற்றும் கிராம பஞ்., பகுதிகளிலும், வார்டு வாரியாக பூத் கமிட்டி (பி.எல்.2) உறுப்பினர்களை சரிபார்த்து மாற்றி அமைக்கும் பணி சம்பந்தப்பட்ட, சட்டசபை தேர்தல் தொகுதி பார்வையாளர்கள் முன்னிலையில் நடக்கிறது. நாமக்கல் சட்டசபை தொகுதி மேலிட பார்வையாளர், மாநில சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு துணை செயலாளர் முனவர் ஜான் முன்னிலையில், இன்று, நாமக்கல் தெற்கு, மேற்கு நகரம்; நாளை, நாமக்கல் கிழக்கு நகரம், 9ல், புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியம். வரும், 10, 11ல், நாமக்கல் ஒன்றியம், 12ல், மோகனுார் டவுன் பஞ்., 12, 13ல், மோகனுார் ஒன்றியம், 14ல், புதுச்சத்திரம் தெற்கு ஒன்றியம் ஆகிய இடங்களில் நடக்கிறது.
சேந்தமங்கலம் தொகுதியில், தொகுதி பார்வையாளர், மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ரேகா பிரியதர்ஷினி முன்னிலையில், இன்று, சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., நாமகிரிப்பேட்டை ஒன்றியம்; நாளை, எருமப்பட்டி ஒன்றியம், 8ல், எருமப்பட்டி ஒன்றியம் மற்றும் டவுன் பஞ்., 9ல், சேந்தமங்கலம் ஒன்றியம், டவுன் பஞ்., காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்., 10ல், சேந்தமங்கலம் ஒன்றியம், 11, 12ல், கொல்லிமலை ஒன்றியம், 13ல், மோகனுார் ஒன்றியம், 2 பஞ்., நாமக்கல் ஒன்றியம், ஒரு பஞ்., பூத் கமிட்டி கூட்டம் நடக்கிறது.
ராசிபுரத்தில், தொகுதி மேலிட பார்வையாளர், மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் முன்னிலையில், 9ல், நாமகிரிப்பேட்டை ஒன்றியம், 10ல், வெண்ணந்துார் ஒன்றியம், 11ல், ராசிபுரம் ஒன்றியம், பட்டணம் டவுன் பஞ்., 12ல், ராசிபுரம் ஒன்றியம், பிள்ளாநல்லுார் டவுன் பஞ்., 13ல், ராசிபுரம் நகரம், 14ல், வெண்ணந்துார் ஒன்றியம், வெண்ணந்துார், அத்தனுார், ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்., பூத் கமிட்டி கூட்டம் நடக்கிறது. அதில், பூத் கமிட்டி உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட பகுதி கட்சி நிர்வாகிகள் அனைவரும் தறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.