/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எம்.பி., ராஜேஸ்குமாருக்கு தி.மு.க., இளைஞரணி வாழ்த்து
/
எம்.பி., ராஜேஸ்குமாருக்கு தி.மு.க., இளைஞரணி வாழ்த்து
எம்.பி., ராஜேஸ்குமாருக்கு தி.மு.க., இளைஞரணி வாழ்த்து
எம்.பி., ராஜேஸ்குமாருக்கு தி.மு.க., இளைஞரணி வாழ்த்து
ADDED : மார் 12, 2024 04:31 AM
ராசிபுரம்: -நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, எம்.பி. ராஜேஸ்குமாருக்கு, தி.மு.க., இளைஞரணியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின், முதன்மை அமைப்பாளர் மற்றும் தலைவராக எம்.பி., ராஜேஸ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நாமகிரிப்பேட்டை பேரூர் இளைஞரணி சார்பில், மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் தலைமையில், 18 வார்டுகளை சேர்ந்த வார்டு அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். பேரூர் கழக செயலாளர் அன்பழகன், நாமகிரிப்பேட்டை பேரூர் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மூர்த்தி, பழனிவேல், முருகதாஸ், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தாமரைக்கண்ணன் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.