/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அ.தி.மு.க.,வில் இணைந்த தி.மு.க., கவுன்சிலர்
/
அ.தி.மு.க.,வில் இணைந்த தி.மு.க., கவுன்சிலர்
ADDED : செப் 30, 2025 01:39 AM
வெண்ணந்துார், வெண்ணந்துார் யூனியன், அத்தனுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட, 13வது வார்டு கவுன்சிலர், தி.மு.க.,வை சேர்ந்த பிரகாஷ். இவர், நேற்று நாமக்கல் அ.தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில், அக்கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி தலைமையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
முன்னாள் அமைச்சர் சரோஜா, ஒன்றிய செயலாளர் தாமோதரன், அத்தனுார் டவுன் பஞ்., உறுப்பினர்கள் துரைசாமி, மாயக்கண்ணன் உள்பட கலர் கலந்துகொண்டனர். 2026 சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆளும் கட்சியின் டவுன் பஞ்., உறுப்பினராக இருந்த பிரகாஷ், தி.மு.க.,வில் இருந்து, அ.தி.மு.க.,வில் ஐக்கியமாகி உள்ளார். இது அத்தனுார் டவுன் பஞ்., பகுதியில் பேசும் பொருளாகி உள்ளது.