/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்தால் தி.மு.க., வெல்லும் என கனவு: 'மாஜி' காட்டம்
/
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்தால் தி.மு.க., வெல்லும் என கனவு: 'மாஜி' காட்டம்
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்தால் தி.மு.க., வெல்லும் என கனவு: 'மாஜி' காட்டம்
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்தால் தி.மு.க., வெல்லும் என கனவு: 'மாஜி' காட்டம்
ADDED : நவ 07, 2024 01:28 AM
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்தால்
தி.மு.க., வெல்லும் என கனவு: 'மாஜி' காட்டம்
குமாரபாளையம், நவ. 7-
குமாரபாளையம் அருகே, அ.தி.மு.க., வடக்கு ஒன்றியம், படைவீடு பேரூர் கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம், வடக்கு ஒன்றிய செயலர் குமரேசன், தெற்கு ஒன்றிய செயலர் செந்தில் தலைமையில் நடந்தது. இதில், நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி பேசியதாவது:
ஊராட்சிகளை, நகராட்சியுடன் இணைத்தால், எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என, தி.மு.க., கனவு கண்டு வருகிறது. ஊராட்சி பகுதிகளை, தி.மு.க.,வின் கோட்டையாக்கி விடலாம் என, எண்ணி உள்ளனர். அப்படி நடந்தால், 100 ரூபாய் வரி செலுத்திய இடத்தில், 2,000 ரூபாய் வரி செலுத்தும் நிலை உருவாகும். சொத்து வரி உயரும். இந்த இரண்டு காரணத்தால் தான், உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் அனைத்து சாலைகளும் தார்ச்சாலையாக மாற்றி காட்டினோம். அனைத்து பகுதிக்கும் குடிநீர் கிடைக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, இப்போது மேட்டூரில் இருந்து, குமாரபாளையம் அருகே உள்ள ஊராட்சி பகுதிகள், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் கிடைத்து வருகிறது. 2026ல் அ.தி.மு.க., வெற்றி பெற்று விட்டால், இனி தி.மு.க.,விற்கு தமிழகத்தில் வேலை இல்லை. அதனால், வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணியை கவனமாக பாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.