/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விசைத்தறி இலவச மின்சாரத்தை 1,000 யூனிட்டாக உயர்த்தியது தி.மு.க., அரசு: எம்.பி., ராஜேஸ்குமார்
/
விசைத்தறி இலவச மின்சாரத்தை 1,000 யூனிட்டாக உயர்த்தியது தி.மு.க., அரசு: எம்.பி., ராஜேஸ்குமார்
விசைத்தறி இலவச மின்சாரத்தை 1,000 யூனிட்டாக உயர்த்தியது தி.மு.க., அரசு: எம்.பி., ராஜேஸ்குமார்
விசைத்தறி இலவச மின்சாரத்தை 1,000 யூனிட்டாக உயர்த்தியது தி.மு.க., அரசு: எம்.பி., ராஜேஸ்குமார்
ADDED : ஏப் 07, 2024 03:39 AM
ராசிபுரம்: ''விசைத்தறிக்கான இலவச மின்சாரத்தை, 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்கியது தி.மு.க., அரசு,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் பேசினார்.
நாமக்கல் லோக்சபா தொகுதியில், தி.மு.க., கூட்டணியின், கொ.ம.தே.க., வேட்பாளர் மாதேஸ்வரன், நேற்று பாச்சல் கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார். மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஆகியோர் கைத்தறி நெசவு செய்யும் இடத்திற்கு நேரடியாக சென்று பிரசாரம் மேற்கொண்டனர். மாதேஸ்வரன், கைத்தறியை நெய்தபடி ஓட்டு சேகரித்தார்.
தொடர்ந்து, எம்.பி., ராஜேஸ்குமார் பேசியதாவது:
நாமக்கல்லில் முட்டை தொழில்போல், கைத்தறி, விசைத்தறியும் முக்கிய தொழிலாக உள்ளது. பருத்தி சேலைக்கு, இந்திய அளவில் நாமக்கல் மாவட்டம் பெயர் பெற்றுள்ளது. பிள்ளாநல்லுார், பாச்சல், வெண்ணந்துார் உள்ளிட்ட கிராமங்களில், இன்றளவும் தமிழக அளவில் பாரம்பரிய கைத்தறி நெசவுகள் உள்ளன. தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில், கைத்தறி தொழிலுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். அதேபோல், தற்போதைய முதல்வர், கைத்தறி தொழிலுக்கு வழங்கி வந்த, 200 யூனிட் இலவச மின்சாரத்தை, 300 யூனிட்டாக உயர்த்தி உத்தரவிட்டார். விசைத்தறிக்கு, 700 யூனிட்டில் இருந்து, 1,000 யூனிட்டாக இலவச மின்சாரத்தை உயர்த்தியுள்ளார்.
தி.மு.க., ஆட்சியில் எப்போதும் விசைத்தறி தொழிலாளருக்கு சாதகமான திட்டங்களை வழங்கி வந்துள்ளோம். கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இலவச வேட்டி, சேலையை கைத்தறி கூட்டுறவு சங்கம் மூலம், தி.மு.க., அரசு காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டது. கைத்தறி நெசவாளர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை, தி.மு.க., அரசு நெசவாளர் குடும்பங்களுக்கு வழங்கியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

