/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.மு.க., சார்பில்தண்ணீர் பந்தல் திறப்பு
/
தி.மு.க., சார்பில்தண்ணீர் பந்தல் திறப்பு
ADDED : ஏப் 17, 2025 02:05 AM
மோகனுார்:'பொதுமக்களின் தாகம் தீர்க்க, தி.மு.க., சார்பில், ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும்' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதையடுத்து, தமிழகம் முழுவதும், அக்கட்சியினர், தண்ணீர் பந்தல் திறந்து வருகின்றனர். அதன்படி, மோகனுார் டவுன் பஞ்.,ல், தி.மு.க., சார்பில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா, நேற்று நடந்தது.
நகர செயலாளர் செல்லவேல் தலைமை வகித்தார். மோகனுார் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் நவலடி, நாமக்கல் நகர செயலாளர் ராணா ஆனந்த், டவுன் பஞ்., தலைவர் வனிதா, துணைத்தலைவர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்ச், லெமன் ஆகியவற்றை வழங்கினார். முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் உடையவர், நிர்வாகிகள் வரதராஜன், காமராஜ், ஹரி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, டவுன் பஞ்., நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.