/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.மு.க., பாக முகவர்கள் கூட்டம்: மா.செ., அழைப்பு
/
தி.மு.க., பாக முகவர்கள் கூட்டம்: மா.செ., அழைப்பு
ADDED : நவ 09, 2024 01:29 AM
ராசிபுரம், நவ. 9-
ராசிபுரம் சட்டசபை தொகுதியில், பாக முகவர்கள் கூட்டம் நடக்கும் இடங்கள் குறித்து மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், தலைமை கழக தேர்தல் தொகுதி பார்வையாளர்கள் முன்னிலையில், பாக., முகவர்கள் (பி.எல்.ஏ.2) ஆலோசனை கூட்டமும், சரிபார்க்கும் பணியும் நடக்கிறது. இன்று, நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும், நாளை, வெண்ணந்துார் ஒன்றியம், 11ல் ராசிபுரம் ஒன்றியம் மற்றும் பட்டணம் டவுன் பஞ்சாயத்து, 12ல் ராசிபுரம் ஒன்றியத்தில் மீதமுள்ள பகுதிகள் மற்றும் பிள்ளாநல்லுார் டவுன் பஞ்சாயத்து, 13ல் ராசிபுரம் நகரம், 14ல் வெண்ணந்துார் ஒன்றியம், வெண்ணந்துார், அத்தனுார், ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்.,களில் நடக்கிறது. இதில், தொகுதி பார்வையாளராக மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் கலந்து கொள்கிறார்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.