/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளிப்பாளையம் நகராட்சியில் நாய் பிடிக்கும் பணி துவக்கம்
/
பள்ளிப்பாளையம் நகராட்சியில் நாய் பிடிக்கும் பணி துவக்கம்
பள்ளிப்பாளையம் நகராட்சியில் நாய் பிடிக்கும் பணி துவக்கம்
பள்ளிப்பாளையம் நகராட்சியில் நாய் பிடிக்கும் பணி துவக்கம்
ADDED : டிச 06, 2024 07:35 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில், சுற்றித்திரியும் நாய்களை பிடிக்கும் பணியில், சென்னையை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
பள்ளிப்பாளையம் நகராட்சி குடியிருப்பு பகுதியில், கடந்த சில மாதங்களாக நாய் தொல்லை அதிகரித்துள்ளது. வாகன ஓட்டிகளையும், நடந்து செல்லும் போது பொது மக்களையும், கடிக்க நாய்கள் துரத்துவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 1ம் தேதி காந்திபுரம், ஐந்தாவது மற்றும் ஆறாவது வீதி பகுதியில், 20 க்கும் மேற்பட்டவர்களை வெறிநாய் கடித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள், வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்தனர்.
பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில், 1,285 நாய்கள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, நேற்று சென்னையில் இருந்து அரசு அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனம் மூலம் நாய்களை பிடித்து தடுப்பூசி, கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பணி நடந்து வருகிறது.