ADDED : ஜூலை 16, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்: வெண்ணந்துார் யூனியன் அலுவலகத்தில், 62 பயனாளிகளுக்கு, 'கலைஞரின் கனவு இல்லம்' ஆணை வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.வெண்ணந்துார் யூனியனுக்குட்பட்ட, 24 பஞ்சாயத்துகளில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு, 'கலைஞரின் கனவு இல்லம்' திட்-டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி, யூனியன் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் உமா தலைமை வகித்தார். அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஸ்-குமார் ஆகியோர், முதல் கட்டமாக, 62 பயனாளிகளுக்கு, 1.17 கோடி ரூபாய் மதிப்பில், கனவு இல்லத்துக்கான ஆணை வழங்-கினர். 'ஆத்மா' குழு தலைவரும், ஒன்றியக்குழு உறுப்பினருமான துரைசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் துரைசாமி, பி.டி.ஓ.,க்கள் வனிதா, மேகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.