ADDED : அக் 08, 2026 03:24 AM

அ நிறம் | அளவு
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம்
டவுன் பஞ்.,ல் சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் திருட்டில்
ஈடுபடுபவர்களுக்கு, செயல் அலுவலர் மூவேந்திரபாண்டியன்
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மல்லசமுத்திரம் டவுன் பஞ்.,ல் உள்ள, 15 வார்டுகளில், சட்டத்திற்கு
புறம்பாக குடிநீர் இணைப்பில் இருந்து மின்மோட்டார் மூலம் குடிநீர்
திருடி வருகின்றனர். இதனால் மற்ற வீடுகளுக்கு குடிநீர் சரியாக சென்று
சேராமல், குடிப்பதற்கே தண்ணீரின்றி அவதிப்படுவதாக புகார்
எழுந்துள்ளது. இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பாக தண்ணீர் திருடினால்,
சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
